ஆதார் என்பது குடியுரிமை சான்று அல்ல என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Case against freebies: SC refuses to hear it immediately

டெல்லி, ஆகஸ்ட் 12:

ஆதார் என்பது சரியான அடையாள ஆவணம் அல்ல என்ற தேர்தல் ஆணையத்தின் வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

பீகார் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்கு ஆதார் எண், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றை குடியுரிமை சான்றாக ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பீகாரில் 2025-ஆம் ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்றன. இதில் தேர்தல் ஆணையம், 2003 முதல் உள்ளோருக்கு எந்தவொரு ஆதார ஆவணமும் தேவையில்லை என அறிவித்திருந்தாலும், பட்டியலில் இல்லாதவர்கள் பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு நகல் போன்ற கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தது.

இதனை எதிர்த்து, பல கட்சிகள் மற்றும் ஜனநாயக சீர்திருத்த சங்கங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு கடந்த ஜூலை மாதம் விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமனற்ம், பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது வாக்காளர்களின் குடியுரிமை ஆவணமாக ஆதார், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று உச்ச பரிந்துரை செய்திருந்தது.

இது குறித்து பதிலளிக்கவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்டவற்றை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது என்ற தேர்தல் ஆணையத்தின் கருத்தை ஏற்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related posts

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

கேரளாவுக்கு ஒரு நீதி..மேற்கு வங்காளத்திற்கு ஒரு நீதியா? மம்தா பானர்ஜி ஆதங்கம்

இலவசங்களுக்கு எதிரான வழக்கு: உடனே விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு