டெல்லி, செப்டம்பர் 08:
பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலை திருத்தும் விவகாரம் தொடர்பாக நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜாய்மால்யா அவர்கள் தலைமையில் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணையில், வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதற்கு ஆதார் அட்டை 12-வது அடையாள ஆவணமாக தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, வாக்காளர்கள் ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக சமர்ப்பிக்கலாம்.
ஆனால், ஆதார் அட்டையின் நம்பகத்தன்மையும் உண்மைத்தன்மையையும் சரிபார்க்க அதிகாரிகளுக்கு உரிமை உண்டு என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. ஆதார் சட்டப்படி குடியுரிமைக்கான ஆவணம் அல்ல; மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவில் 23(4) படி அது ஒரு அடையாளச் சான்று என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் தெரிவித்தது
இதற்கு முன்னர் ஏற்கப்பட்ட 11 ஆவணங்களுடன் சேர்த்து ஆதார் அட்டையை 12-வது ஆவணமாக ஏற்றுக்கொள்ள தேர்தல் ஆணையம் அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும் என்றும், ஆதார் அடையாள அட்டையை ஆதரவளிக்கும் வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் உறுதி செய்துள்ளது.