நெல்லை, டிசம்பர் 23:
பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட தொல்லியல் துறை சார்பில் கட்டண விவரம் வெளியிடப்பட்டுள்ளது. நெல்லை சீமைக்கும், பொருநை நாகரிகத்துக்கும் புகழ் சேர்க்கும் வகையில் ரூ.67.25 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை இரவு திறந்து வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியார்பட்டி மலைப் பகுதியில் 13 ஏக்கர் பரப்பில் 54,296 சதுர அடியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
‘பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிடுவதற்கு இன்று (டிச.23) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையொட்டி, பொதுமக்கள் சென்று வர வசதியாக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இந்த நிலையில், பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட பெரியவர்களுக்கு ரூ. 20, சிறுவர்களுக்கு ரூ. 10, மாணவர்களுக்கு ரூ. 5 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.