ஈரோடு, டிசம்பர் 03:
ஈரோடு மாவட்டம் அன்னை சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த மாணிக்-மகாலட்சுமி தம்பதியரின் 5 வயது மகன் சாய் சரண், நேற்று இரவு சிறுவன் சாய்சரண் வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அப்போது திடீரென சிறுவன் சாய்சரண் மூச்சு விட சிரமப்பட்டு திணறினான்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சாய்சரணின் பெற்றோர் அக்கம்பக்கத்தினர் உதவி உடன் சிறுவனை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர் சிறுவனின் மூச்சு குழாயில் வாழைப்பழம் அடைத்திருப்பதாக கூறினார். மேலும் சிறுவனின் நிலைமை மோசமாக உள்ளது. உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினார். இதை அடுத்து சிறுவனை அவரது பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதைக் கேட்டு பெற்றோர் கதறி அழுதனர். அதன் பின்னர் சிறுவன் சாய்சரண் மூச்சுக்குழாயில் அடைத்திருந்த வாழைப்பழத்தை மருத்துவர்கள் அகற்றினர்.
இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.