15
சென்னை, நவம்பர் 29 :
‘டிட்வா’ புயலானது சென்னையை நோக்கி நெருங்கிவருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை, டெல்டா மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து புயலின் தாக்கம் மற்றும் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு தொடர்பான விவரங்களை அமைச்சர் கேட்டறிந்து கவனமாக செயல்படுமாறு அதிகாரிகள் மற்றும் பொது மக்களுக்கான தேவைகள் குறித்து ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தினார்.
டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட மழை நிலவரத்தையும் ஆராய்ந்த அமைச்சர், மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் விரைந்து வழங்கப்படும் என்று அறிவுரை வழங்கினார்.