மும்பை, நவம்பர் 24:
பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திரா இன்று காலை உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.
இதய கோளாறு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக பல நாட்களாக மும்பை ப்ரீச் கேன்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து வீட்டிற்குக் கொண்டு வந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்ததாக இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் சமூக ஊடகங்கள் மூலம் உறுதி செய்துள்ளார்.
சில வாரங்களுக்கு முன்பு தர்மேந்திரா பற்றிய தவறான வதந்திகள் பரவிய நிலையில், அவரது மனைவியும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹேமமாலினியும் மகள் ஈஷா தியோலும் அவர் நலமுடன் இருப்பதாக தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், தர்மேந்திராவின் மறைவை மும்பை காவல்துறை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியதுடன், இறுதி சடங்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. பாலிவுட் நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், சல்மான் கான் உள்ளிட்ட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
1950களில் திரையுலகில் அறிமுகமான தர்மேந்திரா, Sholay, Satyakam, Yaadon Ki Baaraat உள்ளிட்ட பல பிரபலப்படங்களுக்கு நினைவில் நிற்பவர். தனது சிறந்த நடிப்புக்காக பல விருதுகளை பெற்றதுடன், பாராட்டுக்குரிய அரசியல் பயணத்தையும் மேற்கொண்டிருந்தார்.