சென்னை, அக்டோபர் 27:
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் மோந்தா புயலாக மாறியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின்படி , இந்த மோந்தா புயல் நாளை மாலை அல்லது இரவு ஆந்திரா மாநிலம் உள்ள மச்சிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு அதிகபட்சம் 110 கிலோமீட்டர் வேகமான காற்று வீசும் என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதையொட்டி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. வானிலை முன்னறிவிப்பு படி இம்மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
மேலும் கூடுதலாக வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்டும் அறிவிக்கப்பட்டு உள்ளது, அங்கு நாளை மிகக் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் சுற்று பகுதிகளிலும் இன்றும் நாளையும் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.