சென்னை, அக்டோபர் 23:
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதையடுத்து, சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கோவை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கோவை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வரும் 26-ந்தேதி 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வரும் 27, 28-ந்தேதிகளில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.