சென்னை, அக்டோபர் 18:
வரும் சட்டப்பேரவைத் தேர்தலை வெற்றி பெற திமுக நிர்வாகிகளுக்கான தேர்தல் பயிற்சி கூட்டம் அக். 28 செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் மாமல்லபுரம் ஈசிஆர் சாலை ‘கான்ஃப்ளூயன்ஸ் ஹாலில்’ நடைபெற உள்ளது என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.
தமிழ்நாடு தலைகுனியாது “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம்! கழகத் தலைவர் அவர்களின் திட்டமிடலின்படி வருகின்ற சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை கழகம் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் தமிழ்நாட்டை வளைத்திட முயற்சிக்கும் வஞ்சக சூழ்ச்சி கொண்ட ஒன்றிய பாஜக அரசின் முன்பு “தமிழ்நாடு தலைகுனியாது” என்ற பரப்புரையை கழகம் தொடங்கவுள்ளது. அதன் ஒருபகுதியாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கழத்தின் வெற்றியை உறுதி செய்யும் வகையில்,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்கள் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” என்ற முன்னெடுப்புக்காக ”கழக மாவட்ட செயலாளர்கள் – மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் – சட்டமன்ற உறுப்பினர்கள் – தொகுதி பார்வையாளர்கள் – தலைமை செயற்குழு உறுப்பினர்கள் – ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்க் கழக செயலாளர்களுக்கான பயிற்சிக் கூட்டம்” வரும் 28.10.2025 செவ்வாய்கிழமை, காலை 9.00 மணி அளவில் மாமல்லபுரம், ஈ.சி.ஆர்.சாலையில் உள்ள “கான்ஃப்ளூயன்ஸ் ஹால்”-ல் நடைபெறும்.
இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் – மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் – சட்டமன்ற உறுப்பினர்கள் – தொகுதி பார்வையாளர்கள் – தலைமை செயற்குழு உறுப்பினர்கள் – ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்க் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.