சென்னை, அக்டோபர் 16:
தமிழகத்தில் இன்று கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர்.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் கேரளம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று வடகிழக்குப் பருவமழை தொடங்கக்கூடும் என்றும், இந்திய வானிலை ஆய்வு மையம் முன்ன கூறியுள்ளது.
இந்த நிலையில் தேனி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று பலத்த முதல் மிக பலத்த மழையும், கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தென் மாவட்டங்களில் நேற்றிரவு முதல் விடியவிடிய கனமழை பெய்து வருவதால், நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து பருவமழையின் நிலவரத்தை கண்காணித்து, கணக்கிடப்பட்ட இடங்களுக்கு மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்று எச்சரிக்கை விடுத்துள்ளது.