சென்னை, அக்டோபர் 10:
தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ச்சியாக வந்துவருகின்றன. கோவில்கள், விமான நிலையங்கள், அரசியல் கட்சித் தலைவர்களின் வீடுகள், செய்தி நிறுவனங்கள், சினிமா பிரபலங்களின் வீடுகள் மற்றும் நீதிமன்றங்கள் உள்ளிட்ட பல முக்கிய இடங்களுக்கு இந்த மிரட்டல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.
சைபர் கிரைம் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர், இதுவரை எந்த ஒருவரும் கைது செய்யப்படவில்லை.
அதே நேரத்தில், சென்னை துரைப்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூரில் செயல்படும் முக்கிய ஐ.டி. நிறுவனங்களான 10 மாடி கட்டிடம் கொண்ட சென்னை ஒன் ஐ.டி. வளாகம் மற்றும் இன்போசிஸ் நிறுவனங்களுக்கு இன்று மின்னஞ்சல் வழியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதையடுத்து, விரைந்து சென்ற வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் , போலீசார் ஐ.டி. நிறுவனங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றன. இந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து ஐ.டி.நிறுவனங்களுக்கு பணிக்குவ் அந்த ஊழியர்களை வீட்டிற்கு திரும்பி செல்ல நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளனர்.