25
கரூர், செப்டம்பர் 29:
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கொடூர கூட்டநெரிசலில் 41 பேர் பரிதாபமாக உயிரிழக்க, நூற்றுக்கும் மேலானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துயர சம்பவத்தை அடுத்து சமூக வலைத்தளங்களில் பல தவறான தகவல்கள் மற்றும் அவதூறு கருத்துக்கள் பரவுவதால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கவலை தெரிவித்தார்.
இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள வீடியோவில்,
- கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறுகளையும், வதந்திகளையும் பரப்ப வேண்டாம்.
- கரூரில் இறந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் அறிவித்து உடனடியாக வழங்கி உள்ளோம்.
இதையும் படியுங்கள்: கரூரில் கூட்ட நெரிசல்: காயம் அடைந்தவர்களின் சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார் நிர்மலா சீதாராமன் - அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.
- பொறுப்பற்ற முறையில் கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும்.
- அரசியல் நிலைப்பாடுகளை விலக்கி வைத்துவிட்டு மக்கள் நலனுக்காக சிந்திக்க வேண்டும்.
- கரூர் பெருந்துயரம் இன்னும் என்னை வாட்டுகிறது.
- உயிரிழந்தோர் எந்த கட்சியை சார்ந்தவராயினும் என்னை பொறுத்தவரையில் அவர்கள் தமிழ் உறவுகள்.
- சோகமும் துயரமும் சூழ்ந்திருக்கும் நிலையில் பொறுப்பற்ற முறையில் விஷமமான செய்தி பரப்புவதை தவிர்க்க வேண்டும்.
- எந்த அரசியல் கட்சி தலைவரும் தனது தொண்டர் உயிரிழக்க வேண்டும் என நினைக்க மாட்டார்.
- பெரிய கூட்டங்கள் நடத்துவது தொடர்பாக விதிமுறைகள் வகுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.