சென்னை, செப்டம்பர் 26:
கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் பங்கேற்ற தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் முக்கிய அறிவிப்புக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
முதலைச்சர் வெளியிட்டுள்ள பதிவில், “தெலுங்கானாவில் அடுத்த கல்வியாண்டு முதல் காலை உணவுத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக உங்கள் அறிவிப்பு, இந்நிகழ்ச்சியின் சிறப்பை மேலும் உயர்த்தியது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டின் முதன்மை கல்வி திட்டங்கள் ‘புதுமைப்பெண்’, ‘நான் முதல்வன்’, மற்றும் ‘தமிழ்ப் புதல்வன்’ ஆகியவற்றை பாராட்டியதற்கும், இவை நாட்டில் கல்வி முன்னேற்றத்தை வழிநடத்தும் முன்மாதிரியாக இருப்பதை தெலுங்கானா முதல்வர் உறுதிப்படுத்தியதற்கு அவர் மகிழ்ச்சியுடன் செய்துள்ளார்.
இந்த மாற்றங்கள் அனைத்தும் இந்தியாவில் கல்வி மேம்பாட்டிற்கான நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் என்பதில் நீங்கள் உறுதி அளித்துள்ளீர்கள் என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.