சென்னை, செப்டம்பர் 22:
தமிழ் திரைப்பட உலகின் புகழ்மிகு நடிகர் எம்.ஆர். ராதாவின் மனைவி மற்றும் பிரபல நடிகை ராதிகாவின் தாயாருமான கீதா ராதா, வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் காலமானார். அவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் நடிகர் நாசர், பிரபு உள்ளிட்ட பல திரைத்துறையினர் மறைந்த கீதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இந்த நிலையில் கீதாவின் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நடிகவேள் எம்.ஆர் ராதாவின் மனைவி கீதா ராதா மறைவுக்கு இழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பிரிவால் வாடும் சகோதரி ராதிகா சரத்குமார் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் ஆறுதலைக் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.