ஈரோடு, செப்டம்பர் 15:
அதிமுக ஒருங்கிணைப்புக்காக கடந்த 10 நாட்கள் கெடு வைத்து இருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இன்று ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்து தனது நோக்கம் குறித்து உரையாற்றினார்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பது எனது நோக்கம். கட்சி மீண்டும் ஆட்சி நிலையாக அமர வேண்டும் என்பதற்காக மனம் திறந்தபடி பேசினேன். தொண்டர்கள் மற்றும் மக்களின் கருத்துக்களை பிரதிபலித்தேன். இந்த கருத்துக்கு பெரும் ஆதரவு பெற்றுள்ளேன்.”
அண்ணாவின் பெயரால் எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க.வை ஜெயலலிதா கட்டிக் காத்தார். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று பேரறிஞர் அண்ணா கூறியுள்ளார். எனவே, மறப்போம், மன்னிப்போம். அ.தி.மு.க. ஒன்றிணையும் விவகாரம் குறித்து புரிய வேண்டியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
“2026-ஆம் ஆண்டு நடைபெறும் அதிமுக ஆட்சிக்கு அனைத்து உறுப்பினரும் உறுதுணையாக இருக்க வேண்டும்” என்றும் செங்கோட்டையன் கூறியுள்ளார்.