சென்னை, செப்டம்பர் 12:
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருடப்பட்ட அரசு பேருந்து ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் மீட்கப்பட்டது.
திருப்பதிக்கு செல்ல இருப்பதாக இருந்த அந்த பேருந்தை மர்ம நபர் ஒருவர் கடத்தி சென்றுள்ளார். இது குறித்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் போலீசாரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து கோயம்பேடு போலீசார் இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், நெல்லூர் போலீசார்கள் அந்த பேருந்தை மீட்டு, கடத்தியவராக உறுதி செய்யப்பட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஞானராஜன் சாகு என்ற வாலிபரை கைது செய்து சென்னைக்கு கொண்டு வந்தனர். மேலும் போலீசார் அந்த இளைஞரிடம் சம்பவம் குறித்து தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். பேருந்து நிலைய மேலாளர் ராம்சிங் புகார் அளித்ததால், இந்த சம்பவம் முறையீடு செய்யப்பட்டது என்பது காவல் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.