டெல்லி, செப்டம்பர் 10:
அண்மையில் துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க. வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் பா.ஜ.க. தலைவர்களோடும் எம்.பி.க்களோடும் இன்று காலை சந்தித்து நன்றி தெரிவித்தார். அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்து செய்திகள் குவிந்து வந்துள்ளன.
இதனையடுத்து சி.பி.ராதாகிருஷ்ணன் வரும் 12-ஆம் தேதி பாராளுமன்றத்தில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை பாராளுமன்ற அதிகாரிகள் செய்துவருகிறார். பதவி ஏற்பு நேரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதும், அழைப்பிதழ்கள் வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
துணை ஜனாதிபதிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் மற்றும் அரசியல் காப்பு உறுதிமொழியை வழங்குவார். பின்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பாராளுமன்றத்தில் துணை ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தனது பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார்.
தற்போது, அவர் மகாராஷ்டிரா மாநில ஆளுநராக பணியாற்றி வருகிறார். புதிய பதவி ஏற்புக்கு முன்னதாக அந்த பதவியிலிருந்து ராஜினாமா செய்த கடிதத்தை அனுப்புவார் என்றும் தெரிவித்துள்ளனர்.