சென்னை, செப்டம்பர் 03:
தங்கம் விலை சென்னையில் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் , இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 78,440 ரூபாய்க்கு விற்பனை ஆகி புதிய வரலாற்று உச்சத்தைத் தாண்டியது.
அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பின் எதிரொலியாக, இந்திய ரூபாயின் டாலர் மதிப்புலகத்தில் குறைவு மற்றும் தங்கத்தின் மீதான முதலீட்டாளர் ஆர்வம் அதிகரித்ததை காரணமாக உலக சந்தையில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
கடந்த 9 நாள்களில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதுடன், ஆகஸ்ட் 29-இல் சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து ஒரு சவரன் ரூ.76,280 கடந்தது. அதன்பின், ஆக.30-இல் ரூ.680 உயர்ந்து 76,960-க்கு, செப்டம்பர் 1-இல் மேலும் ரூ.680 உயர்ந்து ரூ.77,640-க்கும் செப்டம்பர் 2-இல் ரூ.160 உயர்ந்து ரூ.77,800-க்கும் சென்றது. அந்த வகையில் இன்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்துஒரு சவரன் ரூ.78,440-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் கடந்த 9 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.4,000-க்கும் மேல் உயர்ந்துள்ளது.
வெள்ளி விலையிலும் மாற்றம் இல்லாமல் உள்ளது; கிராமுக்கு ரூ.137, ஒரு கிலோ கட்டி வெள்ளிக்கு ரூ.1.37 லட்சம் ஆக விற்பனையாகி உள்ளது. கடந்த 5 நாட்களுக்குள் வெள்ளி மதிப்பில் ரூ.5,000 அதிகரித்துள்ளது.