சென்னை, செப் 01:
சென்னையில் இன்று தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,705-க்கும், சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.77,640-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விளைவாக, ஒரு சவரன் தங்கத்தின் விலை 78 ஆயிரத்தை நெருங்குகிறது.
இத்துடன் 18 காரட் தங்கம் விலையும் நேர்த்தியாக உயர்வை கண்டுள்ளது; கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,030-க்கும், ஒரு சவரன் ரூ.600 உயர்ந்து ரூ.64,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை மாற்றம் மாதத்தின் முதல் நாளிலேயே பெரும் அதிர்ச்சியாக பொருளாதார மற்றும் நகை சந்தையில் கணிக்கப்படுகிறது. கடும் சர்வதேச மாற்றங்கள், இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள வரிகள் மற்றும் பண்டிகை காலம் தொடங்குவதால் தங்கம், வெள்ளி முதலியவைகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
அதே வகையில் வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது; ஒரு கிராமுக்கு ரூ.2 அதிகரித்து ரூ.136-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,36,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.