சென்னை, ஆகஸ்ட் 29:
தமிழகத்தில் நிர்வாக காரணங்களுக்காக, உள்துறை செயலாளர் தீராஜ்குமார் உத்தரவின் பேரில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளின் பணியிட மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த லட்சுமி ஐபிஎஸ், தற்போது ஊழல் தடுப்பு பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி அனிஷா உசேன் ஆகியோரும் புதிய இடங்களுக்குத் தங்கள் பொறுப்புகளை மாற்றம் செய்துள்ளனர்.
சென்னை கிழக்கு இணை ஆணையராக விஜயகுமார் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். கிழக்கு காவல்துறை இணை ஆணையராக பண்டி கங்காதர் நியமிக்கப்பட்டு, சென்னை தெற்கு போக்குவரத்து காவல்துறை இணை ஆணையராக விஜயகுமார் நியமனம் பெற்றார். சென்னை மாநகர போக்குவரத்து பிரிவு வடக்கு இணை ஆணையராக சோனல் சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் சென்னை மேற்கு மண்டல போக்குவரத்து இணை ஆணையராக சுகாஷினி ஐபிஎஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று, சென்னை குற்றப்பிரிவு சிஐடி காவல் கண்காணிப்பாளராக பி. எச்.ஷாஜிதா நியமிக்கப்பட்டார். கோவை காவல் தலைமையக துணை கமிஷனராக திவ்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த இடமாற்றங்கள் மூலம் காவல் துறையின் முக்கிய பகுதிகளில் அதிகாரிகள் அதிகாரப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.