32
காபூல், ஆகஸ்ட் 20:
ஆப்கானிஸ்தானின் மேற்கு மாகாணத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 71 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குசாரா மாவட்டத்தைச் சேர்ந்த ஹெராத் நகருக்கு அருகே பேருந்து ஒன்று அவ்வழியாஜ சென்ற லாரி மற்றும் பைக் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர் பேருந்து தீப்பற்றி எரிய தொடங்கியது. இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 17 குழந்தைகள் உள்பட 71 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த பஸ் ஈரான் அகதிகளை ஏற்றிக்கொண்டு காபூல் நகரம் நோக்கி பயணம் செய்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது. புலம்பெயர் அகதிகள் அதிகமாக பயணிக்கும் இந்த வழியில் நடந்த இந்த துயரம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சம்பந்தமாக அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.