54
சென்னை, ஆகஸ்ட் 9:
அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அ. அன்வர்ராஜா, சமீபத்தில் தி.மு.க.வில் இணைந்தார். தற்போது அவருக்கு தி.மு.க.வில் இலக்கிய அணி தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்ததன்படி, திமுக சட்ட திட்ட விதி 31, பிரிவு 10-ன் படி முன்னாள் அமைச்சர் அ. அன்வர்ராஜா திமுக இலக்கிய அணி தலைவராக தலைமை கழகம் மூலம் நியமிக்கப்படுகிறார்.
புலவர் இந்திரகுமாரி வகித்து வந்த தி.மு.க. இலக்கிய அணி தலைவர் பொறுப்பில் முன்னாள் அமைச்சர் அ. அன்வர்ராஜா நியமிக்கப்படுகிறார். இந்நியமனம் திமுகவில் இலக்கிய, கலாச்சார முன்னெடுப்புகளுக்கு புதிய செயல் ஊக்கத்தை வழங்கும் முன்னோடியான மாற்றமாக கருதப்படுகிறது.