தென் கர்நாடக மாவட்டம் உள்ள தர்மஸ்தலாவில், கடந்த 10 ஆண்டுகளாக இருதரப்பினரிடையேயான மோதல் குறித்து முதல்வர் சித்தராமையா விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். தர்மஸ்தலாவில் நூற்றுக்கணக்கான மறைக்கப்பட்ட மனிதச் சடலங்களைத் தேடும் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) கடந்த 9 நாட்களில் மட்டும் 13 இடங்களில் சோதனைக்குழிகளை அமைத்து தீவிரமாக தேடல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் 6ம் குழியில் சில மண்டை ஓடுகள், எலும்புத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு தடய அறிவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் பெண்களின் எலும்புக்கூடுகள் மற்றும் மண்டை ஓடுகள் இதுவரை கிடைக்கவில்லை. 2012-ல் ஒரு கல்லூரி மாணவி மீது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்ததாக எழுந்த சந்தேகங்கள் தொடர்பாக இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், புதன்கிழமை 12வது குழியைத் தோண்டி பணியாற்றும் போது சில யூடியூபர்கள் அங்கு பேட்டி எடுத்துக்கொண்டி இருந்தனர். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஒருவர் மீது ஒருவர் கல்வீசித் தாக்கினர். அந்த மோதலை போலீசார் சிறிது தடியடி நடத்தி கலைத்தனர்.
இதைத் தொடர்ந்து தர்மஸ்தலா காவல் நிலையம் முன்பாக சிலர் தர்மஸ்தலாவின் புனிதத்தன்மையை கெடுக்க முயற்சி மேற்கொண்டதாகவும், அதனை தடுக்கும் பேச்சுவார்த்தைகள் நடந்ததும் கொண்டு வழக்கு தொடர கோரியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் சித்தராமையா, “யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தார்.