சென்னை, ஆகஸ்ட் 13:
சென்னையில் ஆகஸ்ட் 13-ஆம் தேதி புதன்கிழமை காலை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 13-ம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும். இதில் “ஓரணியில் தமிழ்நாடு – உறுப்பினர் சேர்க்கை” என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இக்கூட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டம், மாநில அளவில் கட்சியின் உறுப்பினர் நீட்டிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு முயற்சிகளை துரிதப்படுத்துவதற்கான அங்கமாக இருக்கிறது. இக்கூட்டத்தில் அனைத்து மாவட்டக் கழகச் செயலாளர்களும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.