இனி இவ்வளோ லட்சம் டெபாசிட் செய்தால் தான் அமெரிக்கா செல்ல முடியும் – டிரம்ப் அதிரடி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நடத்திய புதிய திட்டத்தின் கீழ், அமெரிக்க விசா பெற விரும்பும் தற்காலிக பயணிகள் ரூ.13 லட்சம் அல்லது சுமார் 15,000 அமெரிக்க டாலர் வரை மதிப்புள்ள ஒரு பாதுகாப்பு பிணைப்பத்திரத்தை டெபாசிட் செலுத்தவேண்டும் என்பது சோதனை முறையில் விரைவில் அமலுக்கு வருகிறது. இந்த புதுப்படுத்தப்பட்ட திட்டம் விசா காலத்தை தாண்டி அமெரிக்காவில் தங்குவதை தடுப்பதற்காக உருவாகியுள்ளது.

டிரம்ப் அரசு சட்டவிரோத குடியேற்றங்களை தடுப்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கடந்த 2023-ம் ஆண்டின் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை அறிக்கை படி, அந்த ஆண்டில் 5 லட்சத்துக்கு மேற்பட்ட வெளிநாட்டினர் விசா காலத்தினை மீறியே அமெரிக்காவில் தங்கியிருந்தனர். இதை தவிர்க்க இந்த பிணைப்பத்திர திட்டம் முக்கிய கருவியாகும்.

இந்த திட்டத்தின் படி, சுற்றுலா மற்றும் வர்த்தக காரணங்களுக்காக அமெரிக்கா செல்லும் B-1 மற்றும் B-2 வகை விசாவிற்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டினர் இந்த பாதுகாப்பு பணத்தை செலுத்தவேண்டும். விசா காலத்தை மீறி தங்குபவர்களுக்கு இந்த பணத்தை இழக்கும் அபாயம் உண்டு. விசா காலத்தை கடந்து அதிகமாக தங்கிவரும் நாடுகளுக்கே முதலில் இந்த விதிமுறை பொருந்தும்.

இந்த திட்டம் இம்மாதம் அமலுக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த நாடுகள் இதில் அடங்கும் என்பதை 15 நாட்களுக்கு முன்பாக அரசாங்கம் அறிவிக்கும் மற்றும் அதற்கான விளக்கமும் தரப்படும். இதில் தேவைக்கேற்ப பட்டியலில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அமெரிக்கா, விசா காலத்தை மீறும் வெளிநாட்டினரால் ஏற்படும் தேச பாதுகாப்பு அச்சுறுத்தல்களை குறைக்கவும், வெளிநாட்டு கொள்கையை மேலும் வலுப்படுத்த முயலுகிறது. மேலும் இந்த திட்டம் அமலுக்கு வந்தால், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் போன்ற நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு அதிக தாக்கம் ஏற்படக்கூடும் எனவும் கூறப்படுகிறது.

அதனால், அமெரிக்கா செல்ல உள்ள பயணிகள் தங்கள் பயணத்தினை கவனமாக திட்டமிட வேண்டிய அவசியம் உள்ளது. விசா பெறும் முன் ரூ.13 லட்சம் பாதுகாப்பு பணம் செலுத்த வேண்டியிருக்கக்கூடும் என்பதால் இதும் கட்டண மற்றும் பயணத் திட்டங்களை சிக்கலாக்க இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED NEWS

Latest News