சென்னை, ஆகஸ்ட் 04:
முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 7-வது நினைவு தினமான ஆகஸ்ட் 7-ந் தேதி, திமுக சார்பில் அமைதி பேரணி அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக முதல்வரும் மற்றும் திமுக தலைவரும் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், கழக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணியினர் கலந்து கொள்ளயுள்ளனர்.
பேரணி காலை 7 மணிக்கு சென்னை, அண்ணா சாலை ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் சிலை அருகிலிருந்து தொடங்கி, காமராஜர் சாலையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் நிறைவடையும். தலைமைச் செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் திரண்டு, கருணாநிதியின் நினைவுகளை போற்றி அஞ்சலி செலுத்த மிகுந்த வரவேற்பு தெரிவிக்கப்பட உள்ளது.ட்
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எழுத்தாளராக, கவிஞராக, இயக்குனராக, சிறந்த நிர்வாகியாக, தமிழ்நாட்டின் 5 முறை முதல்வராகவும் மற்றும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக பன்னிரண்டு ஆண்டுகளாக சிறப்பாக பதவி வகித்தவர்.