டெல்லி, ஆகஸ்ட் 01:
பீகார் மாநில வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி உள்ளிட்ட முக்கிய விவகாரங்களை விவாதிக்கக்கோரி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று காலை எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் அமளி எழுப்பினர். இதனால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஓத்திவைக்கப்பட்டது.
மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்கிய நிலையில், தொடக்க நாளிலிருந்தே பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக குற்றச்சாட்டு மற்றும் விவாதத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முற்றுகை கொடுத்து வருகின்றனர்.
இன்று காலை 11 மணி அளவில் இரு அவைகளும் தொடங்கியதும், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, அவைகள் அமைதியாக செயல்படுவதில் சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து, மக்களவை மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை – நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம், மழைக்கால கூட்டத்தொடரில் அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே முரண்பாடுகள் மேலும் கூரமாகும் நிலையில், மக்களை பெரிதும் பாதிக்கும் முக்கிய விவகாரங்களை விவாதிக்க புதிய நேரம் தேடப்பட வேண்டியிருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.