சென்னை, ஜூலை 31:
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உடல் நலம் குறித்து தேமுதிக பொதுச்செயலாளரான பிரேமலதா விஜயகாந்த் இன்று நேரில் சென்று நலம் விசாரித்தார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் இல்லத்தில் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருந்த ஸ்டாலினை பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்த சந்திப்பின் போது எடுத்த புகைப்படத்துடன் எக்ஸ் தளத்தில் நேரில் சந்தித்து நலம் விசாரித்த பிரேமலதாவிற்கு நன்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.“நட்புடன் நலம் விசாரித்தமைக்கு நன்றி!” என தனது பதிவில் கூறிள்ளார். அவர் மேலும், “இந்த நேரத்திலும் அரசாங்க பணிகளிலும் முழுமையாக ஈடுபட்டு வருகிறேன். மக்கள் நலன் எனும் பணியில் இணைந்து செயல்படுவது நம் உற்சாகமாகும்” என்றும் தெரிவித்தார்.