டெல்லி, ஜூலை 28:
மாநிலங்களவையில் அதிமுக எம்.பிக்கள் புதியதாக பதவியேற்ற நிலையில் அக்கட்சையின் உறுப்பினர் எண்ணிக்கை 4-ல் இருந்து 5 ஆக அதிகரித்துள்ளது.
இன்று (ஜூலை 29) காலை 11 மணிக்கு டெல்லியில், அதிமுகவைச் சேர்ந்த ஜி.எஸ்.இன்பதுரை மற்றும் எஸ்.தனபால் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கு மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதற்குமுன், கடந்த வெள்ளிக்கிழமை தமிழகத்தை சார்ந்த பி.வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் (திமுக) மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றிருந்தனர்.
இதையடுத்து, தற்போது அதிமுகவைச் சேர்ந்த இருவரும் பதவியேற்று உள்ளனர். ஏற்கனவே அதிமுகவில் தம்பிதுரை, சி.வி. சண்முகம், தர்மர் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்த நிலையில், இனி மாநிலங்களவையில் அதிமுக எம்.பிக்கள் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாடுக்கு உரிய மாநிலங்களவை உறுப்பினர்களில் வைகோ, பி.வில்சன், சண்முகம், எம்.எம். அப்துல்லா, அன்புமணி, சந்திரசேகரன் ஆகியோரது பதவிக்காலம் அண்மையில் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவ்விஇடங்களுக்காக புதிய தேர்தல் நடைபெற்றது. அதில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்கள் இப்போது பதவியேற்றுள்ளனர்.