சென்னை, ஜூலை 26:
தமிழகத்துக்கு இரண்டு நாள் பயணமாக வரும் பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தற்போது மருத்துவமனையில் இருந்து, முதன்முறையாக தனது மனுவை தலைமைச் செயலாளர் மூலமாக பிரதமருக்கு அனுப்பியுள்ளார். இந்த மனுவை அமைச்சர் தங்கம் தென்னரசு பிரதமர் மோடியிடம் நேரில் வழங்குவார் என முதலமைச்சர் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்தார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது,
“மருத்துவமனையில் இருப்பதால், தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமரிடம் வழங்கவுள்ள கோரிக்கைகள் குழுவை தலைமைச் செயலாளர் மூலம் அனுப்பி உள்ளது. அமைச்சர் தங்கம் தென்னரசு அந்த மனுவை பிரதமருக்கு வழங்குவார்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த மனு மூலம் தமிழக அரசின் பிரதமரிடம் உள்ள முக்கிய கோரிக்கைகள் மற்றும் முன்னெடுப்புகள் பிரதமருக்கு தெரிவிக்கப்படுவதாகும்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம் திறப்பு விழாவில் பங்கேற்று, பிறகு அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடக்கவுள்ள நிகழ்ச்சியில் நாளை கலந்து கொள்வார்.