சென்னை, ஜூலை 24:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைசுற்றல் பிரச்சனை காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு மேற்கொள்ளப்பட்ட விரிவான மருத்துவப் பரிசோதனைகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன. க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இதய சிகிச்சைத் துறையின் டாக்டர் G.செங்குட்டுவேலு தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழுவின் ஆய்வில், இதயத் துடிப்பில் சில வேறுபாடுகள் தலைசுற்றலுக்கான முக்கிய காரணமாக இருக்கவேண்டும் என கண்டறியப்பட்டது.
இதன்போல், முதலமைச்சருக்கு தேவையான சிகிச்சைமுறை அப்போலோ மருத்துவமனையில் இன்று காலை செய்யப்பட்டது. இன்று மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் சோதனையும் இயல்பாக இருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து மருத்துவமனை அதிகாரிகள் வெளியிட்ட அதிகாரபூர்வமான அறிக்கையில், முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது நலமாக இருக்கிறார் என்றும், இரண்டு நாட்களுக்குள் தனது வழக்கமான அரசு பணிகளுக்கு திரும்புவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.