சென்னையில் சுதந்திர தின விழா: முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்

இந்தியாவின் 80-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவுக்கான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை சென்னை போக்குவரத்து போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

விழா நடைபெறும் பகுதிகளில் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை மெரினா, கோட்டை, பாரிமுனை மற்றும் ராஜாஜி சாலை பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வாகனங்களுக்கு மாற்று வழி

காமராஜர் சாலையில் இருந்து பாரிமுனை நோக்கி செல்லும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை பகுதியில் இருந்து வாலாஜா சாலை வழியாக திருப்பி விடப்படும்.

அதேபோல், பாரிமுனையில் இருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் வடக்குக் கோட்டை பக்க சாலை, ராஜா அண்ணாமலை சந்திப்பு மற்றும் முத்துசாமி சாலை வழியாக மாற்றி அனுப்பப்படும்.

சிவப்பு மற்றும் பர்பிள் அனுமதி அட்டை

சென்னை கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பங்கேற்கும் நபர்களுக்கு வாகன அனுமதி அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

சிவப்பு மற்றும் பர்பிள் நிற அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் காலை 8 மணி வரை கோட்டை உள்வாயில் அருகே வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படுவர். பின்னர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.

ராஜாஜி சாலை வழியாக வரும் இந்த அனுமதி அட்டை வைத்திருப்பவர்களுக்கும் இதே நடைமுறை பொருந்தும்.

போர் நினைவுச் சின்னம் வழியாக வருபவர்கள் கொடிமரச்சாலை, முத்துசாமி பாலம், பாரிமுனை சந்திப்பு மற்றும் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக கோட்டையின் வெளிவாயில் அருகே செல்ல வேண்டும். அங்கு பயணிகளை இறக்கிவிட்டு, கோட்டைக்கு எதிரே உள்ள பொதுப்பணித்துறை இடத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.

நீலம் மற்றும் பிங்க் அனுமதி அட்டைக்கு விதிமுறைகள்

நீலம் மற்றும் பிங்க் நிற வாகன அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் காலை 8.30 மணி வரை ராஜாஜி சாலை வழியாக போர் நினைவுச் சின்னம், கொடிமரச்சாலை, முத்துசாமி சாலை, பாரிமுனை சந்திப்பு மற்றும் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக கோட்டையின் வெளிவாயிலை அடையலாம்.

அனுமதி அட்டை இல்லாதவர்களுக்கு அறிவுரை

வாகன அனுமதி அட்டை இல்லாதவர்கள் கோட்டை விழா நடைபெறும் முக்கிய பகுதிகளுக்கு வாகனத்தில் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். அவர்கள் போர் நினைவுச் சின்னம் அருகே இறங்கிக்கொண்டு, தங்களது வாகனங்களை தீவுத்திடல் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்த வேண்டும்.

Related Post

Latest News