16
திருப்பூர், ஜூலை 9:
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா வரட்சணை கொடுமையால் கடந்த மாதம் ஜுன் 28-ம் தேதி தற்கொலை செய்துக் கொண்டார்.
இந்த வழக்கில் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் கவின், ஈஸ்வரமூர்த்தி ஆகியோரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது மாமியார் சித்ராதேவியின் ஜாமின் மனு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி ஜாமின் மனு மீதான விசாரணையை வரும் 11-ம் தேதிக்கு ஓத்திவைக்கப்படுவதாக உத்தரவிட்டார்.