12
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சின்ன கமான்பட்டியில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த பட்டாசு ஆலையில் இன்று காலை தீடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
இதனையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர்.இருப்பினும் இந்த விபத்தில் ஆலையில் உள்ள 4-க்கும் மேற்பட்ட அறைகள் பலத்த சேதம் அடைந்துள்ளது.
மேலும் இந்த வெடிவிபத்தில் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 3 பெண்கள், 4 ஆண்கள் என 7 பேர் பலியாகி உள்ளனர்.இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பட்டாசு ஆலையின் போர்மேனை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.