சேலம், ஏப்ரல் 13:
சட்டசபை தேர்தலில் சேலம் மேற்கு தொகுதியில் ராமதாஸ் அணி சார்பில் அருள் எம்எல்ஏ மீண்டும் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக பாமக நிறுவனர் ராமதாஸ் பிரசாரம் செய்தார்.
சேலத்தில் நேற்று நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ராமதாஸ், திடீரென மயக்கம் அடைந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராமதாசை தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார்.
