கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன் மகன் பிரசாரம்

கோவை, ஏப்ரல் 13:

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தற்பொழுது கோவை வடக்கு தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். பிரசாரத்தின் போது திடீரென அவருக்கு கால் வலி ஏற்பட்டது. அதன் பின்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளின் காரணமாக திடீரென அலர்ஜி ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவர் மேலும் மூன்று முதல் நான்கு நாட்கள் வரை தொடர்ச்சியாக சிகிச்சை எடுக்கப்பட வேண்டிய நிலை இருக்கும் என்ற ஒரு தகவலை மருத்துவமனை வெளியிட்டுள்ளது. இதனால் வானதி சீனிவாசன் அடுத்தடுத்து பிரசாரத்தில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசனுக்கு உடல்நிலை சரி இல்லாத காரணத்தினால் அவருடைய மகன் வீடு வீடாக பிரசாரம் செய்து வருகிறார். இன்னும் இரண்டு நாட்களில் அம்மா வந்துவிடுவார். மருத்துவமனைக்கு அம்மாவை பார்க்க சென்ற போது கூட எப்போது பிரசாரத்திற்கு செல்லலாம் என்று தான் கேட்டு வருகிறார். அந்த தொகுதி மக்கள் உங்களுடைய அம்மாவுடன் நீங்களும் இணைந்து பிரசாரத்திற்கு வர வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

RELATED NEWS

Latest News