டெல்லி, ஏப்ரல் 07:
இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் தலை மையில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் எதிர்க்கட்சிகளை ஆட்டம் காட்டியது. அவர் ஜனநாயகத்துக்கு புறம்பாக நடப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். குறிப்பாக மேற்கு வங்காளத்தின் திரிணா முல் காங்கிரஸ் கட்சி அவரை கடுமையாக எதிர்த்தது.
இந்தநிலையில் அவரை பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக் கையில் எதிர்க்கட்சியினர் இறங்கினர். அதன்படி, நாடாளுமன்ற இரு அவைகளிலும் கடந்த மாதம் 13-ம் தேதி அந்த கட்சி எம். பி.க்கள் பதவி நீக்கம் கோரும் தீர்மான நோட்டீசை அளித்தனர். அதில், ஞானேஷ் குமார் மீது ஏழு குற்றச்சாட்டுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
அதில், பதவியில் பாரபட்சமான நடத்தை முதல் தேர்தல் மோசடி விசாரணையை வேண்டுமென்றே தடுத்தல் மற்றும் பெரும் வாக்குரிமை பறிப்பு வரை பல்வேறு குற்றச்சாட்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஞானேஷ் குமார் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது ஆளும் பாஜகவுக்கு உதவியதாகவும் அந்த நோட்டீஸில் குற்றம் சாட்டப்பட்டது.
இது இந்திய அரசியல் வரலாற்றில் முதல் முறையான நடவடிக்கை ஆகும். இந்த தீர்மான நோட்டீசை மக்களவை மற்றும் மாநிலங்களவை செயலகங்கள் ஆய்வு செய்தன. அரசியலமைப்பு விதிகளின்படி அவை சரியாக இருப்பின் ஏற் றுக் கொள்ளப்படும் என தெரிகிறது. ஏற்றுக்கொள்ளப்பட்டால் இரு அவைகளிலும் தாக்கல் ஆகி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானம் எந்த காரணமும் கூறப்படாமல் இரு அவைகளிலும் நிராகரிக்கப்பட்டுள்ளது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மாநிலங்களவை சபாநாயகர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நோட்டீசை நிராகரித்துள்ளனர்.
தலைமை தேர்தல் கமிஷனரை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தை முன்மொழிய மாநிலங்களவைக்கு குறைந்தபட்சம் 50 எம்.பி.க்களின் கையெழுத்தும், மக்கள வைக்கு 100 எம்.பி.க்களின் கையெழுத்தும் தேவை. ஆனால் இவர்கள் சமர்ப்பித்த தீர்மான நோட்டீசில் 63 மாநிலங்களவை எம.பி.க்களும், 130 மக்களவை எம்.பி.க்களும் கையெழுத்திட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

