நெல்லையில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி!

நெல்லை, ஏப்ரல் 07:

நெல்லையில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது.

கட்டுப்பாடுகளுடன் பிரசாரம் செய்யவும், வாகனத்தில் இருந்தபடியே மக்களை சந்திக்கவும் காவல் துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட தவெக வேட்பாளர்களை ஆதரித்து திருநெல்வேலியில் அக்கட்சின் தலைவர் விஜய் தோ்தல் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டது.

திருநெல்வேலியில் தவெக தலைவர் விஜய் ஏப். 8 ஆம் தேதி பிரசாரம் மேற்கொள்வதற்கான முன்னேற்பாட்டு பணிகளை கட்சி நிர்வாகிகள் மேற்கொண்டு வந்தனர். கேடிசி நகர் பகுதியில் விஜய் பிரசாரம் மேற்கொள்வதற்காக, காவல் துறையினரிடம் அனுமதி கோரப்பட்டது.

இந்த நிலையில், பிரசாரம் நடைபெறவுள்ள கேடிசி நகர் பகுதியை காவல் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்த பின்னர், அனுமதி வழங்கியுள்ளனர். தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு 5 ஆயிரம் பேர் மட்டுமே கூட வேண்டும். கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

RELATED NEWS

Latest News