8-வது முறையாக ராயபுரத்தில் ஜெயக்குமார் வேட்புமனு தாக்கல்

சென்னை, ஏப்ரல் 02:

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 23-ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 30-ம் தேதி தொடங்கியது.

வருகிற 6-ந்தேதி வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். அன்று மதியம் 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது.

இதற்காக மாநிலம் முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் உருவாக்கப்பட்டு உள்ளது. அந்த அலுவலகங்களில் இன்று காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது.

இந்நிலையில், சென்னை ராயபுரம் தொகுதியில் போட்டியிட 8வது முறையாக இன்று வேட்புமனுவை அதிமுக வேட்பாளர் டி.ஜெயக்குமார் தாக்கல் செய்தார். 1991-ல் இருந்து தொடர்ந்து இத்தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED NEWS

Latest News