2-ம் கட்ட பிரசாரத்தை நெல்லையில் தொடங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, ஏப்ரல் 01:

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டு விட்டது. ஒவ்வொரு கட்சியும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

அதன்படி கொளத்தூர் தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதன்பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். இதனை தொடர்ந்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூரில் நேற்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

இந்நிலையில் இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு திருச்சி உழவர் சந்தையில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் திருச்சி மேற்கு, கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், ஸ்ரீரங்கம், மணப்பாறை, முசிறி, துறையூர் (தனி) ஆகிய 9 தொகுதிகளில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

அதன்பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூருக்கு புறப்பட்டு செல்கிறார். கரூரில் இன்று மாலை ராயனூர் பகுதியில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். இதனைத்தொடர்ந்து முதற்கட்ட பிரசாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (02.04.2026) கோவையில் நிறைவு செய்கிறார்.

இந்நிலையில் 2ஆம் கட்ட பிரசாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லையில் தொடங்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு சட்டசபை தேர்தல் – 2026 தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களின் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயண விவரம்:-

RELATED NEWS

Latest News