கூட்டணி கட்சி தலைவர்களுக்கு தேநீர் விருந்து அளிக்கும் மு.க. ஸ்டாலின்

சென்னை, மார்ச் 30:

சட்டசபை தேர்தலில் ஆளும்கட்சியான தி.மு.க. 26 கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்துள்ளது. இதில் காங்கிரஸ் -28, தே.மு.தி.க.-10, விடுதலை சிறுத்தைகள்-8, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-5, இந்திய கம்யூனிஸ்டு-5. ம.தி.மு.க.- 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்- 2, மனிதநேய மக்கள் கட்சி-2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி-2, மனிதநேய ஜனநாயக கட்சி-1, எஸ்.டி.பி.ஐ.-1, முக்குலத்தோர் புலிப்படை தலைவர்-1, தமிழர் தேசம் கட்சி-1 என கூட்டணி கட்சிகளுக்கு 70 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தி.மு.க. 164 இடங்களில் போட்டியிடுகிறது.

ம.தி.மு.க. 3 இடங்கள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட 6 கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 8 இடங்களில் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அந்த வகையில் 175 தொகுதிகளில் ‘உதயசூரியன்’ சின்னம் களம் காண்கிறது.

தி.மு.க. போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டு, பிரசாரத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டது.

வேட்புமனு தாக்கல் இன்று தொடங்க உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கொளத்தூரில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். இந்த நிலையில், கூட்டணி கட்சி தலைவர்களுக்கு மு.க. ஸ்டாலின் இன்று தேநீர் விருந்து அளிக்கிறார்.

இந்த தேநீர் விருந்தின்போது, தேர்தல் பிரசாரம் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். நாளை முதல் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

RELATED NEWS

Latest News