சென்னை,பிப்ரவரி 24:
தேனியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று அவருக்கு எனது மரியாதையும் வீரவணக்கமும். இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் முதன்மையானவராக விளங்கிய பாரதி கண்ட புதுமைப்பெண்.
தன்னையே தமிழ்நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்த தன்னலம் பாராத உன்னத தலைவர் ஜெயலலிதா. பிரிந்தவர்களை இணைத்து 1991-ல் ஆட்சி அமைத்தவர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தொண்டர்களுக்காக கட்சி நடத்தினர். கட்சிக்கு சோதனை வந்தபோது என்னிடம் முதல்-அமைச்சர் பதவியை கொடுத்தவர் ஜெயலலிதா.
ஜெயலலிதா இறந்த பிறகு என்னை கட்டாயப்படுத்தி முதலமைச்சர் ஆக்கினார்கள். கட்டாயத்தின் பேரில் தான் நான் 3-வது முறையாக முதல்-அமைச்சர் ஆனேன். தன்னையே தமிழ்நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்த தன்னலம் பாராத உன்னத தலைவி ஜெயலலிதா. சாதனை சரித்திரங்கள் பல படைத்து ஜெயலலிதாவின் புகழ் பூமி உள்ளவரை நிலைத்து இருக்கும் என்று அவர் கூறினார்.