சென்னை, செப்டம்பர் 12:
அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பாக வார விடுமுறை தினங்கள் மற்றும் முகூர்த்த நாளை முன்னிட்டு, சென்னை மற்றும் மண்டல பகுதிகளுக்குள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளோடு கூடுதலாக 980 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து நடப்பு வெள்ளிக்கிழமை திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய 12 இடங்களுக்கு 355 பேருந்துகளும், சனிக்கிழமை 350 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
மேலும், சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூரு பகுதிகளுக்கும், இன்று மற்றும் நாளை 55 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை பகுதிகளிலிருந்தும் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதனுடன், மாதவரம் பகுதியில் இன்று மற்றும் நாளை 20 சிறப்பு பேருந்துகள் சேவையும் வழங்கப்படுவதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இது பொது மக்களுக்கும், பயணிகளுக்கும் வசதியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.