சென்னை, ஆகஸ்ட் 9:
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையிரனால் மேற்கொள்ளப்படும் அட்டூழியம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் கச்சத்தீவு அருகே வடக்கு மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் தமிழ்நாடு சார்ந்த 7 மீனவர்கள் இலங்கை கடற்படையிரனால் கைது செய்யப்பட்டு, அவர்களது ஒரு படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 8 பேரை கைது செய்தும் ஒரு படகை பறிமுதல் செய்தும் இலங்கை கடற்படை அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது.
இலங்கை கடற்படையின் இந்த அராஜக நடவடிக்கைக்கு தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசு கடுமையாக வலியுறுத்தி வந்தாலும், இதுவரை பிரச்சனையினை சமாளிக்க தீர்வு காணப்படவில்லை. இந்த விசயத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் வெளியுறவு அமைச்சரான ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி, கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கையிட்டார்.