மயிலாடுதுறை மாவட்டத்துக்கு முதலமைச்சரின் 8 புதிய அறிவிப்புகள்!

"The welfare of the people of the country is my welfare" – CM Stalin's speech

மயிலாடுதுறை, ஜூலை 16:

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பல்வேறு திட்டங்களைத் தொடக்கம் செய்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்வின்போது, மயிலாடுதுறை மாவட்டத்திற்காக 8 முக்கிய புதிய திட்டங்களை அறிவித்துள்ளார்.

அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்கள்:

  1. மயிலாடுதுறை நீடூரில் ரூ.85 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.
  2. மங்கநல்லூர்-ஆடுதுறை சாலை ரூ.45 கோடியில் இருவழிச்சாலையாக மேம்படுத்தப்படும்.
  3. சுதந்திர போராட்ட தியாகி சாமி நாகப்பனுக்கு உருவச்சிலை நிறுவப்படும்.
  4. குத்தாலம் வாய்க்கால் ரூ.7 கோடி செலவில் புதுப்பிக்கப்படும்.
  5. தாழம்பேட்டை மற்றும் வெண்ணக்கோவில் கிராமங்களின் கடற்கரை வசதிகள் ரூ.8 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
  6. சீர்காழிக்கு ரூ.5 கோடி செலவில் புதுமயான நகராட்சி அலுவலகம் கட்டப்படும்.
  7. பூம்புகார் துறைமுகத்தில் ரூ.4 கோடி செலவில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
  8. தேர்கீழ் வீதி உள்ளிட்ட நான்கு இடங்களில் மழைநீர் வடிகால் உடன் சாலை மேம்பாட்டு பணிகள் ரூ.8 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.

மேலும் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக இந்த புதிய திட்டங்கள் பெரிதும் உதவக்கூடும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related posts

முதியோர் ஓய்வூதியத்தோடு கூடுதலாக ரூ.2000 வரவு வைப்பு – முதலமைச்சர் அதிரடி

தஞ்சாவூரில் தவெக தலைவர் பங்கேற்க உள்ள கூட்டத்திற்கு போலீசார் அனுமதி

ஈபிஎஸ்வுடன் தொகுதி பங்கீடு பேச்சு: தென்மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக