நெல்லை, தூத்துக்குடிக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கிய 4 முக்கிய அறிவிப்புகள்

4 important announcements made by CM Stalin for Nellai and Thoothukudi

தூத்துக்குடி, ஆகஸ்ட் 04:

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், தொடங்கி வைத்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கான முக்கியமான 4 சிறப்பு அறிவிப்புகளை இன்று முதலமைச்சர் வெளியிட்டார்.

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதிகளை “பசுமை ஹைட்ரஜன்”, “சோலார் செல்” உற்பத்தி, புதுமையான எரிசக்தி திட்டங்கள் கொண்டு புதுப்பிக்கப்போகிறது என்றும், தற்போது வின்ஃபாஸ்ட் மின் வாகன உற்பத்தி தொழிற்சாலை போன்ற பல்வேறு திட்டங்களை துவங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

முதலாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் விண்வெளி பூங்கா (ஸ்பேஸ் பார்க்) அமைக்கப்பட உள்ளது. இந்த பூங்கா, விண்வெளி துறைக்குத் தேவையான கருவிகள் உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

இரண்டாவது: கப்பல் கட்டுமானத் துறையின் வளர்ச்சிக்காக ஒரு பிரத்யேக நிறுவனம் விரைவில் தொடங்கப்படும். இந்த நிறுவனம் மூலம் கப்பல் துறை தொடர்பான அனைத்து கட்டமைப்பு மேம்பாடும் மேற்கொள்ளப்படும்.

மூன்றாவது: தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் 5 கோடி 59 லட்சம் ரூபாய் செலவில் முருங்கை ஏற்றுமதி மற்றும் சாகுபடி கூட்டமைப்பிற்கு பொது வசதி மையம் நிறுவப்படும்.

நான்காவது: திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் மண்டலப் பிரிவு அமைக்கப்பட உள்ளது.

இந்த அறிவிப்புகள், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் தொழில்துறை மற்றும் வேளாண் வளர்ச்சியில் முக்கிய பங்கை வகிக்கும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

Related posts

நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை