சென்னை, டிசம்பர் 06 :
சென்னை விமான நிலையத்திலிருந்து இன்று 25 இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் வெளிநாடுகளுக்குச் செல்லவோ, சொந்த நாட்டுக்கு திரும்பவோ நினைத்த பயணிகள் பெரும் சிரமத்தை அனுபவிக்கின்றனர்.
சென்னையில் இருந்து பல்வேறு நாடுகளுக்கான 25-க்கும் மேலான விமான சேவைகள் இதுவரை ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இன்று மட்டும் 25 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் பயணிகள் எண்ணிக்கை அதிகமான சென்னையில், அன்றைய ரத்து காரணமாக விமான பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திட்டமிட்டு வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய அல்லது தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமையால் பயணிகள் தவித்து வருகின்றனர்.
கடந்த இரண்டாம் தேதி முதல் விமானிகளுக்கான புதிய விதிமுறைகள் காரணமாக, இண்டிகோ விமானங்கள் தொடர்ச்சியாக ரத்து மற்றும் தாமதம் அதிகரித்துள்ளது . இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பயணிகளின் பாதுகாப்பு உறுதிப்பத்திரமாக்க புதிய ஓய்வு நேரக் கட்டுப்பாடுகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் விமானிகள் போதுமான தொகையும், நேரமும் கிடைக்காமையை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறைகளின் காரணமாக, இண்டிகோ நிறுவனம் திட்டமிட்ட விமானங்களை செயல்படுத்த முடியாமல் பெரும் சிரமத்தில் உள்ளது என்று விமான பயணிகள் கவலைபெற்று வருகின்றனர்.
சென்னையில் இருந்து புறப்படும் இண்டிகோ விமானங்கள் பற்றிய முழு விவரங்கள்!
1) காலை 11:15, சென்னையில் இருந்து பெங்களூர் செல்லக்கூடிய இண்டிகோ 6 E 6892 விமானம் ரத்து
2) காலை 11: 40 அளவில் செல்லக்கூடிய இண்டிகோ விமானம் 6E 6374 அகமதாபாத் செக்யூரிட்டியில் உள்ளது
3) இன்று மதியம் 12:35 இண்டிகோ விமானம் 6E 6326. கொல்கத்தாவிற்கு செல்லக் கூடியவை 02 தாமதமாக புறப்படும்
4) 12,35 PM இண்டிகோ விமானம் 6E 0927 கோயம்புத்தூருக்கு செல்லக்கூடியவை ரத்து செய்யப்பட்டுள்ளது
5) 12,40 PM லக்னோ க்கு செல்லக்கூடிய இண்டிகோ : 0515 விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது
6) 12:45 PM சென்னையில் இருந்து இண்டிகோ 2578 விமானம் அகமதாபாத் புறப்படக்கூடிய நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது
7) 01:15 PM சென்னையில் இருந்து பெங்களூருக்கு செல்லக்கூடிய இண்டிகோ விமானம் 0605: ரத்து செய்யப்பட்டுள்ளது
8 ) 1:45 PM சென்னையில் இருந்து சீரடி இண்டிகோ விமானம் 67 97. 02 புறப்படக்கூடிய நிலையில் தாமதமாக புறப்படும்
09) 02:45 PMசென்னையில் இருந்து மும்பை செல்லக்கூடிய இண்டிகோ விமானம் 6E 5371 ரத்து செய்யப்பட்டுள்ளது
10) 3:45 PM சென்னையில் இருந்து அகமாதாபாத் செல்லக்கூடிய இண்டிகோ 0458 விமானம் தாமதமாக புறப்படும்
11) 03:45 PM சென்னையில் இருந்து புறப்படக்கூடிய பூனே இண்டிகோ விமானம் 6E. 1083 ரத்து செய்யப்பட்டுள்ளது
12) 3;45 PM சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு செல்லக்கூடிய இண்டிகோ விமானம் E 6 0982 ரத்து செய்யப்பட்டுள்ளது
13) 3:50 PM சென்னையில் இருந்து கொயட்டுக்கு செல்லக்கூடிய இண்டிகோ விமானம் E 6 6011 ரத்து செய்யப்பட்டுள்ளது
14) 4:00PM சென்னையில் இருந்து டெல்லிக்கு செல்லக்கூடிய இண்டிகோ விமானம் E 06 : 2761 ரத்து செய்யப்பட்டுள்ளது
15) 4:30 PM சென்னையிலிருந்து ஹைதராபாத்துக்கு செல்லக்கூடிய இண்டிகோ விமானம் E 6 : 6158 ரத்து செய்யப்பட்டுள்ளது.