அப்ரிலியா புதிய 2025 SR 125 மாடலை இந்திய சந்தையில் வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு SR 175 அறிமுகமாகியிருந்த நிலையில், தற்போது SR 125 ஸ்கூட்டரில் பல புதிய அப்டேட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. புதிய இன்ஜின் அமைப்பு மற்றும் சிறிய அழகியல் மாற்றங்களுடன், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ரூ.1.20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் இது கிடைக்கிறது.
2025 SR 125 மாடலில் 124.45 சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு, 3 வால்வுடன் கூடிய இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சம் 10 ஹெச்பி பவர் மற்றும் 10 நியூட்டன் மீட்டர் டார்க் வழங்கும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது. ஸ்கூட்டரில் கான்டினியூஸ்லி வெரியேபிள் டிரான்ஸ்மிஷன் மற்றும் டிரை சென்ட்ரிபியல் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச வேகம் மணிக்கு 90 கிலோமீட்டர் வடிவமைப்பில் கார்பன் ஃபினிஷ் டீடெய்லிங், மேட் மற்றும் கிளாஸி ஃபினிஷ் என வாடிக்கையாளர்களுக்கு விருப்ப விருப்பமாக தேர்வு செய்ய முடியும். இன்ஸ்ட்ரூமென்ட் பேனலில் 5.5-இன்ச் TFT டிஸ்பிளே, ஹெட்லைட் மற்றும் டர்ன் சிக்னல்களுக்கு முழு LED லைட்டிங் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும், பாதுகாப்புக்காக முன்புறத்தில் 220மிமீ டிஸ்க், இரட்டை-பிஸ்டன் ஃபுளோட்டிங் கேலிப்பர் மற்றும் பின்புறம் டிரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளன. புதிய அப்ரிலியா SR 125, தொழில்நுட்ப மேம்பாடுகளும், மேம்பட்ட வசதிகளும் கொண்ட ஸ்கூட்டராக இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.