சென்னை, ஆகஸ்ட் 06:
தேனாம்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தன்னுடன் தங்கியிருந்தவரின் தங்க செயின் திருடிய பெண் உள்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த மாதம் 27-ம் தேதி மணி என்பவர் , தீபிகா என்கிறவருடன் தேனாம்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்தார். இந்த நிலையில் மணி காலை எழுந்தபோது, தனது கழுத்தில் அணிந்திருந்த சுமார் 84 கிராம் தங்கச் சங்கிலி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து E-3 தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதார்.
புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணையில், தீபிகா, சதிஷ்குமார் மற்றும் அவரின் கூட்டாளி குமரன் ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து, திருடிய சங்கிலியை விற்று வாங்கிய இருசக்கர வாகனம் மற்றும் பணத்தை மீட்டனர். மேலும், கைது செய்யப்பட்ட தீபிகா மற்றும் சதீஷ்குமாரை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
