அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேர் நீக்கம்

12 supporters of Sengottaiyan expelled from ADMK

சென்னை, நவம்பர் 07:

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆதரவாளர்களாக இருந்த 12 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வி.சத்தியபாமா உள்பட 12 பேரை நீக்கி இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கட்சியின் கொள்கை, நோக்கம் மற்றும் ஒழுங்கு விதிமுறைகளைப் புறந்தள்ளி செயல்பட்டு வந்த அதிமுகவில் முன்னாள் எம்.பி. சத்தியபாமா உள்பட 12 பேர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள முன்னாள் எம்,பி. வி.சத்தியபாமா, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொருளாளர் கந்தவேல் முருகன், நம்பியூர் அதிமுக ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியன், கோபி மேற்கு ஒன்றிய செயலாளர் குறிஞ்சிநாதன், முன்னாள் ஒன்றிய தலைவர்கள் மௌதீஸ்வரன், பி.யூ.முத்துசாமி, அத்தாணி பேரூர் கழகச் செயலாளர் எஸ்.எஸ்.ரமேஷ் உள்ளிட்ட 12 பேருடன் கட்சியினா் யாரும் தொடா்பு வைத்துக் கொள்ளக்கூடாது என அதில் தெரிவித்துள்ளாா். செங்கோட்டையன் ஆதரவாளர்கள் என ஒரே நாளில் 12 பேர் நீக்கப்பட்டிருப்பது அதிமுக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

தேர்தலில் ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல..வெறும் 0 தான்: ஈபிஎஸ் விமர்சனம்

எச். ராஜாவைச் சந்தித்து நலம் விசாரித்த ஈபிஎஸ்!

முதியோருக்கு மாதம் ரூ.2,000; அதிமுக 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு!